Friday, October 8, 2010
கள்ளி மலர்
கான்க்கிரிட் காட்டு
விலங்குகளின்
வாசம் படாத
காணி நிலத் தாவரம் !
பச்சை தோலுக்கும்
வெள்ளை குருதிக்கும்
பிறந்த குழந்தை !
மங்கையின்
கூந்தல் சேற
மல்லிகையுமல்ல !
சாமிக்கே
வாசம் கூட்டும்
சம்மங்கியுமல்ல !
சமையங்களில்
தேனிக்கள் கூட
தீண்டுவதில்லை !
இது யாரும்
சூடா மலர்தான் - ஆனால்
வாட மலர் !
- சு. கனகராஜ்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment