Sunday, March 28, 2010

விழ விழ எழுவோம் ( மே 17 முள்ளிவாய்க்கால்)





இன்று முள்ளிவாய்க்கால் சோக தழும்புகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள். இதே ஆண்டு மே 17 ஆம் தேதி தான் சிங்களம் தான் கோர நாக்குகளால் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்களை விழுங்கத்தொடங்கிய நாள். ஆம் நான்காம்   ஈழப்போர் தமிழ் மக்களின் வாழ்வில் இடியாய் வந்து இறங்கி இரத்தச்சகதியாய் மொத்தத் தமிழினமும் குத்துயிரும் கொலையுமாய் செத்து மடிய  ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லாமல் அலைகடல் முன்பு அலையலையாய் 
ஓடி குடும்பம் குடும்பமாய் எறிகணைக்கும் , ஷெல் வீச்சுகளுக்கும்  ,  விமானத்தாக்குதலுக்கும் , வெறிகொண்ட சிங்கள போர் வீரர்களுக்கும் ,  சிங்கள கடற்ப்படையின் இடை விடாத ஏவுகணை தாக்குதலுக்கும் மத்தியில் தாய் , தந்தை , மகன் , பிள்ளை  என்ற பேரம் பாராமல் கொத்துக்கொத்தாய் செத்து விழுந்த தினம் . ஒன்றரை ஆண்டுகள் நீடித்த போர் கடைசியில் 2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் வாக்குப்பதிவு என்னத்தொடங்கி  காங்கிரஸ் பக்கம் வெற்றி என முடிவுகள் வர தொடங்கியவுடன் சிங்கள ராணுவம் மிக மூர்க்கத்தனமாக தனது இறுதித்தாக்குதலை இந்தியாவின் ஆதரவோடு உலக நாடுகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு , சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக இரசாயன ஆயுதம் ,கனரக ஆயுதங்களின் உதவியுடாக , சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடக மக்களுக்குசென்ற உணவுப்பொருள்களை 
தடுத்து அவர்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கி ,  தமிழ் மக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் செறிந்து இருந்த அந்த முள்ளிவாய்க்கால் மீது  மே 17 ஆம் தேதி தொடங்கி  19 ஆம் தேதி வரை இறுதித்தாக்குதலை ஆரம்பித்து கோரத்தாண்டவம் ஆடியது . கடைசி நேரத்தில் மக்களின் உயிர் பலியை சகிக்க முடியாமல் எஞ்சியுள்ள மக்களை காப்பாற்ற காயமடைந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க  புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கசெய்து புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திரு. நடேசன்  உள்பட  சுமார் 300 பேர் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் திரு. டேவிட் மில்பண்டட், பத்திரிக்கையாளர் திருமதி. கொல்வின் , ஐநாவின் பிரதிநிதி திரு. விஜய் நம்பியார், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் ஊடக கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஒப்புதளைப்பெற்று சரணடைய வந்தவர்களை சர்வதேச போர் விதிகளுக்கு மாறாக மனிதபிமற்ற முறையில் சுட்டுக்கொல்ள்ளப்பட்டனர். அவர்களின் இரத்தம் காய்வதற்குள் மொத்த மக்களையும் கூண்டோடு அழித்து இராசயனக்கலவை ஊற்றி எரித்துவிட்டனர்.
சர்வத்ச பக்கச்சார்பற்ற ஊடகங்களை கடைசிவரை போர் பகுதிகளுக்குள் அனுப்பாமல் சிங்கள அரசு தடுத்தது ஆனால் சிங்கள அரசின் கைகூலிகளான NDTV, CNN ibn, TIMES NOW, HINDU, DINAMALAR ஆகிய ஊடகங்களின் பத்திரிக்கையாளர்களை எதோ சுற்றுலாவுக்கு அழைத்துசெல்வதுபோல் அவர்கள் ஏற்கனவே புலிகளிடமிருந்து
கைப்பற்றிய இடங்களுக்கு கூட்டிச்சென்று போர் நடக்கும் பகுதிபோல பாவ்லா கட்டினார்கள் இங்குள்ள சில ஈர வெங்காயங்களும் அதை அப்படியே நம்பினார்கள் . ஆனால் சர்வதேச ஊடகங்களான BBC, American CNN, THE TIMES (london) , CHENNAL 4 (london), AL JASIRA உள்பட பல ஊடகங்கள் உண்மையை வெட்டவேளிச்சமாக்கின. அதனால் இப்போது சிங்கள அரசின் மீது பல நாடுகள் போர்குற்ற விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன ஆனால் அதையும் இந்திய உள்பட பலநாடுகளின் உதவியோடு தப்பித்துவருகின்றனர் .
இந்த போரை திருமதி. சோனியாகாந்தி மட்டும் நினைத்திருந்தால் ஒரே நாளில் தடுத்திருக்க முடியும் ஆனால் அதை சொன்னால் சில காங்கிரஸ் நண்பர்களுக்கு கோவம் வருகிறது , என்ன செய்வது உண்மை கசக்கிறது என்பதற்காக அதை சொல்லாமலா இருக்கமுடியும். கலைஞர்    போரை நிறுத்துவதை விட  உலக தமிழர்களின் தலைவனாக பிரபாகரன் ஆகிவிடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால் தான் அவரால் போரை நிறுத்தமுடியும் என தெரிந்திருந்தும் கடைசி வரை ஆதரவை திரும்பப்பேராமல் கடிதம் ,தந்தி , கொரியர் , இஸ்பீடு போஸ்ட் , மனிதச்சங்கிலி , போராட்டம் , மறியல் , பந்த்  கடைசியாக 2 மணிநேர உண்ணாவிரதம் என  மழுப்பிக்கொண்டே இருந்தார்.
இவரால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ தபால் துறைக்கு நல்ல வருவாய் கிடைத்தது . முள்ளிவைக்கால் கோரம் நடந்துகொண்டிருந்தபோது இவர் டெல்லியில் அமர்ந்து பதவி பேரம் நடத்திக்கொண்டிருந்தார். இப்போது உலகத்தமிழ் மாநாடு என்று இழந்த தனது பெயரை மீட்க்கப்பார்கிறார். எத்தனை செய்தாலும் கால கல்வெட்டில் கலைஞரின்  துரோகம் என்றும் மறையாது . நான் பிறந்ததே  தி. மு.க  குடும்பத்தில் என்றைக்கு இவர் ஈழ போரில் துரோகம் செய்தாரோ அன்று இவரின் உண்மையான 
சுயருபத்தை தெரிந்து கொண்டேன். இந்தியா இராணுவ தளவாடங்களையும் ,
விமானங்களையும், குருந்தொலைவு   ஏவுகணைகளையும், போர் வீரர்களையும் போதாக்குறைக்கு 500 கோடிக்குமேல் நம் வரிப்பணத்தை கடனாகவும் அள்ளிக்கொடுத்து அதுமட்டுமல்லாமல் ஐநா சபையில் 
சிங்கள அரசின்மீது போர் குற்ற விசாரணை வரும்போதெல்லாம் அதைத்தான் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து காப்பாற்றி வந்தபோதெல்லாம் கைகட்டி வாய்மூடி 
அமைதியாக இருந்துவிட்டு இப்போது தமிழ்மாநாடு என்று கூப்பாடு போடுகிறார்.
சோனியாகாந்தி குடும்பம் செயததென்னாவோ பழிவாங்கல் தான் ஆனால் கலைஞர் செய்தது பச்சை தமிழினத்துரோகம் தன குடும்பத்துக்காக மத்திய அரசோடு சண்டைபோடும் கலைஞர் தமிழினம் கொத்துக்கொத்தாய் செத்தபோது கோரிக்கையோடு 
நின்றது ஏன். தமிழை வைத்து தன்னையும் தன் கட்சியையும் வளர்த்தார் தமிழ் மக்களின் உயிரை வைத்து தன் குடும்பத்தை வளர்க்கிறார் சினிமாக்காரிகளின் அரைகுறை நடனத்திலும் பாரட்டுமழையிலும்  நனையும் இவருக்கு இன்னும் முள்வேலிக்குள் சுமார் 250000 தமிழ் மக்கள் தங்கள் உயிரையும் பெண்கள் மானத்தையும் தங்கள் கையில் பிடித்துக்கொண்டிருப்பது எங்கே தெரியப்போகிறது.      


             


மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டே சாவது மேல் 
என்றான் பாரதிதாசன்    

முள்ளிவாய்க்கால் முடியாது !
தமிழினம் மடியது !
தன்மானம் குறையாது !
சிங்கள சேற்றில் !
தமிழ் மண் விடியாது !


எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக !
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக !
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக !
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன !
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன !
எங்கள் உதடுகள் அண்டியிள்ளன !
எங்கள் பற்களும் கண்டிப்போயுள்ளன !
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக !
எங்கள் முதுகுதோல் பயிந்து  போகட்டும் !
தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் உயரும் !
கவிழ்ந்த இமைகள் ஒருநாள் உயரும் !
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும் !
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் !
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக !
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !

                                 - வைரமுத்து 

             

Wednesday, March 24, 2010

Road side Trees


Vehicles noise
Carbon gas
Non-stopped horns
Sleepless nights
Please,
Let them breath
as we !

Humans who has been
Chopper down
the inherent trees !
They who thought
their final tear !
Nobody can't
live here !
Coming few years !

Please...
Let them live !
Because,
Our lives are
in their leaves !

  • S.Kanagaraj
எப்புடி எங்க இங்கிலிபிஸ்

FIRE AND ICE



Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favour fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.

  • Robert Frost

Tuesday, March 23, 2010

சங்கதி




இறந்தகாலம்
பேசினேன் - அதில்
நிகழ்காலம்
இறந்தது !
  
  • கனகராஜ்  



வளையல்


தங்கம்  , வெள்ளி
வைரம், பிளாட்டினம்
என பெண்களுக்கு
இடப்படும்
விலையுயர்ந்த கை விளங்கு ! 

  •  கனகராஜ்

Monday, March 22, 2010

சாதியும் சாமியும்



சிதறிக்கிடந்த கண்ணாடி 
வளையல்களில் 
கண்ணிர் துளிகள் 
தாயின் கண்களில் !

காப்பாற்றபட்ட  சாதி
குருதி வாசம்
அரிவாள் நுனியில் 
தந்தையின் கைகளில் !

காயாத காதலன் முத்தம் 
கழுத்தோடு உறைந்த 
இரத்தம் 
கடைசி சுவாசம் 
தாயின் மடியில் !

சுவரில் சாய்ந்த
முருகன் படம்
கையில் வேலோடு
அருகில்
குறப்பெண் வள்ளி ! 

இப்படிக்கு
கனகராஜ்
(கருமூலம் பெ. தி .க  மேடைபேச்சு )

Wednesday, March 17, 2010

துருவப் பறவை

பனிபாலை                               
நீங்கள் பார்க்காத                   
ஆறாம் திணை !                   
                                                    
நீர் கூட                                   
கல்லாகும்                              
உறைபாகை!                          
                                                   
சூரியனும்                             
உறைந்து போகும்                           
நெடும் பனிக்காலம் !   
      
குளிர்கால கம்பளி                 
போர்த்திய                                 
மனிதர் மத்தியில்                   
இலையுதிர்ந்த                         
ஆற்றோர
"ஓக்" மரங்கள் !      
                 
ஓயாத                                           
அலைகள் கூட                            
சிலகாலம்                                   
ஓய்வெடுக்கும் !                     
   
பருந்துக்கு                                  
விருந்தான                                  
ஆண்  தோழன் !                    
முட்டையில்                                
இறந்து போன 
என் குஞ்சுகள் !                       
கரையான் தின்ற                   
புத்தகத்தில்                              
எஞ்சிய                                      
பக்கங்கள்                                  
என் வாழ்க்கை !

வசந்த காலத்துக்கு                            
நான்                                                              
வான் நோக்கி 
பறந்த போது
ஓய்வில்லாமல் 
ஓய்வெடுக்கும்
கடல் மீன்கள் !
என் 
கடைசி பதிவுகள் ! 

ஆழ்கடல்
உயரத்தில் 
முகிலுரசி
பறக்கும் போது
சோர்ந்துபோன
என் இறகுகள்
சொல்லிக்கொண்ட
வார்த்தை
" முயற்சி செய் " !

தூரத்தில் வரும்போது
தொட்டு முத்தமிட
நினைத்தேன் !
நெருங்கி வந்தபோது
பயந்து விலகினேன் !
அலுமினிய பறவை !

கடவுசிட்டு
குடியுரிமை அட்டை
எல்லை கோடு
கட்டுப்பாடு
அரைகுறை வாழ்க்கை
வசதி பொருக்க
வேலை
இதற்காக அல்ல !
எலும்புக்குருத்தை
ஊடறுத்துதாக்கும்
பனிப்புயல் !

புதுமண் தொட்டதும்
விசாரணை நடத்தி
முகாமில் அடைக்க  
நான் அகதியல்ல !
எனக்கு
வானமே எல்லை !

                                                 இப்படிக்கு
                                                  கனகராஜ் 

Tuesday, March 16, 2010

கல்கி பகவான், அம்மா பகவான்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். ஒரு களத்தில் எல்ஐசி முகவராக இருந்து ஊர் ஊராக பாலிசி பிடித்துக்கொண்டு இருந்தவர் திடிர்ரென்று கடவுள் என்னோடு பேசியதாகவும் நான் தான் பெருமாளின் கடைசி அவதாரமான கல்கி என்றும் கூற ஆரம்பித்துவிட்டார் ஆங்கிலமும் சரளமாக பேச தெரிந்தால் வசதியாக போய்விட்டது.



இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.


இந்நிலையில் ஆசிரமத்தை சுற்றி உள்ள தொண்டூர், உப்பள மடுகு, நிலவாய், காம்பாக்கம் போன்ற கிராம மக்களிடம் இருந்து 500 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது புகார் எழுந்துள்ளன.


இது பற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்திலும் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடையில் இவரது மகன் பெயரில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.


இந்நிலையில் ஹைதராபாத்தில் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராகவலு  கூறுகையில்,


எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.


அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.


கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் அங்குள்ள கிராம மக்கள் என்னிடம் புகார் கூறினார்கள். இது பற்றியும் ஆந்திர அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரை பற்றி "இண்டியா டுடேயில்"  பக்கம் பக்கமாக எழுதி தள்ளி விட்டார்கள் ஆனால் மக்கள் இன்னும் திருந்திய பாடில்லை .

கொடுமுடிக்கு திர்த்தகாவடி எடுப்பதுபோல் இவரை பார்க்க படைஎடுதுக்கொண்டே இருக்கிறார்கள்.

திருமணமான தம்பதிகள் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச்சென்றல் 50000  கறந்துவிட்டு ஒருநிமிடம் மட்டும் ஆசி வழங்குகிறார் கேட்டால் அந்த ஒரு நிமிடத்தில் கடவுளோடு நேரடியாக பேசி ஆசி வழங்குவதாக கூறுகிறார். கடவுளோடு நேரடியாக தொடர்பு வைத்துள்ள ஒருவருக்கு எதற்க்காக பணம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படை அறிவு கூட நம் மக்களிடம் இல்லை.


மக்களிடம் ஏற்படும் மறுமலர்ச்சியே இப்படிப்பட்ட பக்தி பகல்வேடதரிகளை சிறையில் தள்ளும்

Sunday, March 14, 2010

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்
















இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததா? 
 இல்லை


எப்படி உங்களுக்குத் தெரியும்?


எனக்கு அது தெரியும்.

பொதுமக்கள் மீது ஷெல் மற்றும் குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி…?




அது வெறும் குற்றச்சாட்டுக்கள். இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது தான் தாக்குதல் நடாத்தப்பட்டது. அவை உண்மையான இலக்குகள்.
 
அமெரிக்க சி.என்.என். தொலைக்காட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் தான் மேலுள்ளவை.



இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் அழுத்தம் பெற்று வரும் சூழ்நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி Witness to Survival எனும் நான்கு பாகங்கள் கொண்ட விவரணத் தொடர் ஒன்றைத் தயாரித்துள்ளது.


போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கண்ட கேள்வியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எழுப்பிய சி.என்.என். தொலைக்காட்சி வாழும் சாட்சியங்களூடாக அவரது பதிலை கேள்விக்குள்ளாக்குகிறது.




இரண்டு கால்களையும் மட்டுமல்ல ஒரு கண்ணையும் கூட போரில் பறிகொடுத்திருந்த ரவீந்திரன் ஜெனதாவின் சாட்சியத்தை அது பதிவு செய்திருக்கிறது.


அவர் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்கருகில் கூட குண்டுகள் விழுந்து வெடிக்கின்றன. அவருடைய உறவினருடைய குழந்தை அதிலேயே இநற்து விடுகிறது. தனது உயிரைப் பாதுகாக்க அவர் பதுங்குகுழியிலிருந்தும் ஓடியாக வேண்டியிருக்கிறது. அதன் போது வந்து விழுந்த ஒரு ஷெல்லில் அவர் தனது இரண்டு கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று.




இப்போது அவர் சுயமாக எதனையும் செய்ய முடியாதவராக எல்லா விடயங்களுக்குமே இன்னொருவரில் தங்கியிருப்பவராக ஆகியுள்ளார்.




என்னால் தனித்து எதுவும் செய்ய முடியாமலிருப்பது தான் எனது பெரிய பிரச்சினை என்று சொல்லும் போது அவருடைய வார்த்தைகள் உடைந்து விழுகின்றன. கண்களிலிருந்து நீர் பொலுபொலுவென உதிர்கிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை எதுவும் தனக்கில்லை என்கிறார் அவர்.




நான் மட்டும் தான் இந்த நிலைமைக்கு ஆளானேன் என்றில்லை. என்னைப் போல் ஏராளமானவர்கள் இந்தப் போரில் இவ்வாறு ஆகியுள்ளார்கள். அவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் நம்பிக்கை தருகின்றது என்கிறார் அவர்.




இதேபோல் இரண்டு கால்களையும் போரில் இழந்து சக்கர நாற்காலியுடனேயே வாழ்க்கையை கழிக்கும் சுப்ரமணியம் மகேஸ்வரனுடைய வாழ்வையும் பதிவு செய்திருக்கிறது. ஷெல் தாக்குதலின் காரணமாக அவருடைய இரண்டு கால்களும் அகற்றப்பட வேண்டியதாகி விட்டது. இது தவிர போரில் தமது உறவுகளை இழந்த சிலருடைய வாழ்வையும் அது பதிவு செய்திருக்கிறது.






போரில் அகப்பட்டு இடம் பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அம்முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாக சிஎன்.என் கேட்டதற்கு போர் நடைபெற்ற போது சர்வதேச ஊடகங்கள் மேற்கொண்ட அணுகுமுறை அவர்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தார்கள். குறிப்பாக இடம் பெயர்ந்த மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவை தெரிவித்தன. அதனால் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ராஜபக்ஷே தெரிவித்திருந்தார்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

  


தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில்  தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.



அருண் மொழித்தேவன் என்ற தனது பெயரை பார்பனர்களின் யோசனையால் ராஜராஜன் என மாற்றிக்கொண்டான்.


இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இவன் பிறக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் மக்கள் செழிப்புடன் வாழ கல்லணையை கட்டி பெருமை சேர்த்தான். ஆனால் இராஜராஜன் பார்பனர்கள் செழிப்புடன் வாழ இப்படி பல கோவில்களை கட்டினான்.

இருப்பினும் இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கோயில் அமைப்பு

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும், கோவிலின் நிழல் தரையில் படாத தொழில் நுட்பத்தையும்  பாராட்டாமல் இருக்கமுடியாது.


வெளி நாட்டினர் வியந்து பார்க்கும் இந்த கோவில் 1004ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.

Friday, March 12, 2010

நித்யானந்தரின் பக்தர்

கதவை திறங்கள்
காற்று வரட்டும் !
என்றார் குமுதத்தில் !
கதவை திறந்தாள்
ஏதேதோ வருகிறது !
அவரின் அறையில் !!!!....


அவரை நினைத்தாள் எனக்கு எம். ஜி . ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது ...



எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் !
சமயம் பார்த்து பல வழியிலும் கொள்ளை அடிக்கிறார் !
பக்தனை போலவே பகல் வேஷம் கட்டி ,
பாமர மக்களை வலையினில் மாட்டி ,
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !

Thursday, March 11, 2010

திராவிடர்


திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.

திராவிட மொழிகள்


திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 73 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்திவடிவே லெறிந்த வான்பகை பொறாதுபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டுதென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

பாண்டியனை வாழ்த்தும் பொழுது"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்தமுந்நீர் விழவின் நெடியோன்நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.

அறிவியல் கூற்றுகள்


இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.


ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கல்லணை

இந்த அணை சோழ மன்னன் திருமாவளவன் எனும் கரிகாலனால்  கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.தற்போது உலகில் புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.


சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.

கொலை !

குடிக்காத சாமிக்கு
குடம் குடமாய்
பசும்பால் ! - அதை
குடிக்க வேண்டிய குழந்தைக்கு
கள்ளிப்பால் ! - ஆம்
பெண் குழந்தைக்கு
கள்ளிப்பால் !