Friday, April 1, 2011

Thomas Alva Edison




















 பிறப்பு  = பெப்ரவரி 11, 1847
 இறப்பு = அக்டோபர் 18, 1931

I cannot believe in the immortality of the soul. . . . I am an aggregate of cells, as, for instance, New York City is an aggregate of individuals. Will New York City go to heaven? . . . . No; nature made us--nature did it all--not the gods of the religions.



"மென்லோ பூங்காவின் மேதை" என்றழைக்கப்பட்ட எடிசன், திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். இவர் சாமுவேல் எடிசனுக்கும் நான்சி மாத்தியூஸ் எலியட் என்பாருக்கும் கடைக்குட்டியாக பிறந்தார்.


தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார்.


1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பரிபோனது!  
 
இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார் சில காலம்; பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். 1862 சமயம், ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், ஓடும் இரயில் வண்டியிலிருந்த படியே!  
 
முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு


புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன்.


மின்குமிழி [Electric Bulb]

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது!

எடிசன் , பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்.

எடிசன் பொன்மொழிகள்


"I have never seen the slightest scientific proof of the religious ideas of heaven and hell, of future life for individuals, or of a personal God."


"I do not believe that any type of religion should ever be introduced into the public schools of the United States."



"So far as religion of the day is concerned, it is a damned fake... Religion is all bunk."

மேதை எனப்படுபவன் 1 சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் விடாமுயற்சியும் உடையவனே”.


                                                                    - எடிசன்




Sunday, January 9, 2011

சமூக நீதிக்கான உயர்ந்த தீப்பந்தம்















பெயர்               =  பாபாசாஹிப் அம்பேத்கர்
கதாநாயகன்   =  அம்பேத்கர்
வில்லன்          =  காந்தி
நடிப்பு                =  மம்முட்டி

படத்தின் கதையாக்கம் , ஒளிப்பதிவு மற்றும் மம்முட்டியின் நடிப்பு மிகவும் அருமையாக  உள்ளது . பெரியார் படத்தை விட ஆயியம் மடங்கு உயர்ந்து நிற்கிறது இந்த படம் . பெரியார் படத்தில் இடைவேளைக்குப்பிறகு அவரின் வாழ்க்கை நகர்வுகளை மட்டும் மையப்படுத்தி நகரும் ஆனால் இந்தப்படத்தில் அவரின் போராட்டங்களை மிகவும் வீரியத்தோடு  சொல்கிறது.


பெரியாரின் இந்தியாவின் அரசியல் சட்ட எரிப்புப்போரட்டம் , இந்தியா சீனா போரின்போது அவரின் ஆலய நுழைவுப்போராட்டம் , ராமர் பட எரிப்புப்போரட்டம் , பிள்ளையார் சிலை உடைப்புபோரட்டம் , இராமாயண எரிப்புப்போரட்டம் , குலக்கல்வித்திட்ட எதிப்புப்போரட்டம் , போன்ற எத்தனையோ போராட்டங்களை மறைத்து அவரை காங்கிரஸ் பெரியாராகவே காட்டினார்கள் . ஆனால் அம்பேத்கர் படத்தில் மனுதர்ம எரிப்புப்போரட்டம் , பிரமணர்களுக்கு எதிராக அவர் பேசும் சாட்டையடி வசனங்கள் , காந்தியையும் அவர் கொள்கைகளையும் சாடும் கனல் கக்கும் வசனங்கள் , இந்தியா சுதந்திர போராட்டத்தைவிட  சாமூக விடுதலை தான் முக்கியம் என பேசும் வசனங்கள் இன்றைய இளைய தலைமுறையை    சிந்திக்க வைக்கிறது. 



அன்றைய சாதிக்கொடுமைகளை தோலுரித்துக்காட்டுகிறது. கேடுகெட்ட  இந்துமதத்தை துக்கி எறிந்துவிட்டு புத்த மதத்தை தழுவும் போது பேசும் வசனங்கள் மற்றும் நாசிக் கோவிலை பற்றி அவர் மனைவிக்கு  கூறும் கருத்துக்கள் இந்து மதத்திற்கு அவர் போடும் சம்மட்டி அடி . 


அவர் குறிப்பிட்ட சமுதாயதிற்கு மட்டும் சொந்தமல்ல ஒட்டுமொத்த பார்பனர் அல்லாதார்க்கும் சொந்தம் .


காந்தியை மகாத்மா என்று சொல்பவர்களும் அதை  நம்பி ஏற்றுக்கொள்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .

அம்பேத்கர் படத்தை வசதியாக தங்கள் இலச்சினையில் போட்டுக்கொள்ளும் மதவாத சக்திகள் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

Monday, January 3, 2011

என் மதி















கருப்பு நிலவை
மூடும்
இமை முகில் !

வியர்வை
கொட்டும்
புருவ அருவி !


தென்னம் ஓலையில்
தலைவாறிகொள்ளும்
தென்றல் ! - அவள்
சுவாசக் காற்றாக !


கூந்தல்
பகலில் எரியும்
இருள் விளக்கு !


வார்த்தையில்லாத 
கவிதை 
காது மடல் !

கிளிகள் 
கொத்த மறந்த  
கன்னம் !

புன்னகை 
மொழிபேசும் 
இதழ்கள் !

பூக்கள் 
களவாடும் 
பற்கள் !

"ம்" என்ற
 வார்த்தையில்
ஒளிந்துகொள்ளும்
அவள்  கேள்விகள் !


அவள் 
வாடிய  முகத்தை  
இளஞ்சிவப்பாக்கும்
கதிரொளி !

விரசம் 
தொடாத 
என் கவிதை 
நம் காதல் !  

             சு.கனகராஜ்



Saturday, December 25, 2010

கல்லறை தெய்வங்கள்



இலையுதிர்ந்த கிளைகள்
பச்சையம் வாடிய
கிளைகளின் முலைகள்
எலும்புக் கூடுகளாக
மரங்கள் !


முட்கள் புடைசூழ
வரவேற்கும்
நெருஞ்சி மலர்கள் !


புல் நுனியை
வளைத்து மின்னும்
கடைசி பனித்துளியில்
சூரியனின்
ஒளிச் சிதறல்கள் !


இங்கே
தென்றல் கூட
கசப்பு வாடை
வீசுகிறது !


கடைசிவரை
முகம்பார்க்க வராதவன்
காலடியில் விட்டுச்சென்ற
கண்ணீர் துளிகள்
தாயின் கல்லறையில் !


சு.கனகராஜ்

Wednesday, October 27, 2010

பாண்டியர்

பாண்டியர்

பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்


பாண்டிய நாடு


இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

 
 
பாண்டியரின் தோற்றம்


சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 1000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி






“ "முன்னீர் விழவின் நெடியோன்


    நன்னீர் மணலினும் பலவே"


அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

 
 
 
பாண்டியரைப் பற்றிய பதிவுகள்
 
மகாபாரதத்தில்


திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.



 அசோகனின் கல்வெட்டுக்களில்

மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.



பிற நாட்டவர் பதிவுகள்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




Coin of Augustus found at the Pudukottai hoard, from an ancient Tamil country, Pandyan Kingdom of present day Tamil Nadu in India. British Museum.



The Periplus of the Erythraean Sea (c. 60 - 100 CE) describes the riches of a 'Pandian Kingdom'







...Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea....
 
 









...The kingdom of Panyue is also called Hanyuewang. It is several thousand li to the southeast of Tianzhu (Northern India)...The inhabitants are small; they are the same height as the Chinese.


The Roman emperor Julian received an embassy from a Pandya about 361. A Roman trading centre was located on the Pandyan coast at the mouth of the Vaigai river, southeast of Madurai).






Pandyas also had trade contacts with Ptolemaic Egypt and, through Egypt, with Rome by the first century, and with China by the 3rd century. The 1st century Greek historian Nicolaus of Damascus met, at Damascus, the ambassador sent by a king from Dramira "named Pandyan ",




வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது


இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்




“ "முன்னீர் விழவின் நெடியோன்"

"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"



நெடுஞ்செழியன்


நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்




“ "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்


பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!


பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்


சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்


ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்


முத்தோன்  வருக என்னாது அவருள்


அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்


வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்


கீழ்ப்பால் ஒருவன் கற்பின்


மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"



சிலப்பதிகாரம்


பாண்டிய நாட்டிற்கு சிலம்பு விற்க வந்த கோவலன், தனது மனைவி கண்ணகியை புத்த துறவி கவுந்தியடிகளது பாதுகாப்பில் இருத்தினான். கண்ணகியின் விலைமதிப்பற்ற காற்சிலம்பை அரசனுக்கு விற்க விரும்பி, அவளது ஒரு காற்சிலம்பை மட்டும் எடுத்துக்கொண்டு அரசவைப் பொற்கொல்லனை சந்தித்தான். கண்ணகியின் காற்சிலம்பு அரசியின் சிலம்பை ஒத்திருந்தது. வஞ்சம் மிகுந்த பொற்கொல்லன், காவலர்களை அழைத்து கோவலனே அரசியின் சிலம்பைக் களவுசெய்தவன் என பொய்யுரைத்தான்

வழக்கைத் தீர விசாரிக்காத நெடுஞ்செழியன், "கொண்டக்கள்வனை (கொண்ட+அந்த+கள்வனை) கொணர்க" என்பதற்கு பதில் "கொன்றக்கள்வனை(கொன்று+அந்த+கள்வனை) கொணர்க" என்று கூறி விட்டான். ஆதலால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கருதி அவன் கொலைக் களத்தில் கொல்லப்பட்டான்.




கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி, தன்வசமிருந்த மற்றொரு காற்சிலம்புடன் அரசவை விரைந்தாள். அரசனிடம் நீதி கேட்டாள். அரசியின் ஒரு காற்சிலம்பில் இருந்ததோ முத்து மணிகள். கண்ணகியின் காற்சிலம்போ மாணிக்கப் பரல்களைக் கொண்டிருந்தது.



 தான் அறம் வழுவியதை உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Friday, October 8, 2010

கள்ளி மலர்



கான்க்கிரிட் காட்டு
விலங்குகளின்
வாசம் படாத
காணி நிலத் தாவரம் !

பச்சை தோலுக்கும்
வெள்ளை குருதிக்கும்
பிறந்த குழந்தை !

மங்கையின்
கூந்தல் சேற
மல்லிகையுமல்ல !

சாமிக்கே 
வாசம் கூட்டும்  
சம்மங்கியுமல்ல !

சமையங்களில்
தேனிக்கள் கூட 
தீண்டுவதில்லை !

இது யாரும் 
சூடா மலர்தான் - ஆனால் 
வாட மலர் !  
                       
          - சு. கனகராஜ்

Thursday, July 29, 2010

அன்பு

எலும்புக் கம்பிகள்
பூட்டிய இதயத்தில்
ஈரப் புன்னகை !


காலம்

கடலும்
வானும்
சந்திக்கும் புள்ளி !




ஓவியப்பிழை

பார்வை இழந்த
பாவையின்
கண்களில் வழியும்
கண்ணீர் !