கருப்பு நிலவை
மூடும்
இமை முகில் !
கொட்டும்
புருவ அருவி !
தென்னம் ஓலையில்
தலைவாறிகொள்ளும்
தென்றல் ! - அவள்
சுவாசக் காற்றாக !
கூந்தல்
பகலில் எரியும்
இருள் விளக்கு !
வார்த்தையில்லாத
கவிதை
காது மடல் !
கிளிகள்
கொத்த மறந்த
கன்னம் !
புன்னகை
மொழிபேசும்
இதழ்கள் !
பூக்கள்
களவாடும்
பற்கள் !
"ம்" என்ற
வார்த்தையில்
ஒளிந்துகொள்ளும்
அவள் கேள்விகள் !
அவள்
வாடிய முகத்தை
இளஞ்சிவப்பாக்கும்
கதிரொளி !
விரசம்
தொடாத
என் கவிதை
நம் காதல் !
சு.கனகராஜ்


No comments:
Post a Comment