சிதறிக்கிடந்த கண்ணாடி
வளையல்களில்
கண்ணிர் துளிகள்
தாயின் கண்களில் !
காப்பாற்றபட்ட சாதி
குருதி வாசம்
அரிவாள் நுனியில்
தந்தையின் கைகளில் !
காயாத காதலன் முத்தம்
கழுத்தோடு உறைந்த
இரத்தம்
கடைசி சுவாசம்
தாயின் மடியில் !
சுவரில் சாய்ந்த
முருகன் படம்
கையில் வேலோடு
அருகில்
குறப்பெண் வள்ளி !
இப்படிக்கு
கனகராஜ்
(கருமூலம் பெ. தி .க மேடைபேச்சு )


No comments:
Post a Comment