ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். ஒரு களத்தில் எல்ஐசி முகவராக இருந்து ஊர் ஊராக பாலிசி பிடித்துக்கொண்டு இருந்தவர் திடிர்ரென்று கடவுள் என்னோடு பேசியதாகவும் நான் தான் பெருமாளின் கடைசி அவதாரமான கல்கி என்றும் கூற ஆரம்பித்துவிட்டார் ஆங்கிலமும் சரளமாக பேச தெரிந்தால் வசதியாக போய்விட்டது.
இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.
இந்நிலையில் ஆசிரமத்தை சுற்றி உள்ள தொண்டூர், உப்பள மடுகு, நிலவாய், காம்பாக்கம் போன்ற கிராம மக்களிடம் இருந்து 500 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது புகார் எழுந்துள்ளன.
இது பற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்திலும் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடையில் இவரது மகன் பெயரில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராகவலு கூறுகையில்,
எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.
அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.
கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் அங்குள்ள கிராம மக்கள் என்னிடம் புகார் கூறினார்கள். இது பற்றியும் ஆந்திர அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இவரை பற்றி "இண்டியா டுடேயில்" பக்கம் பக்கமாக எழுதி தள்ளி விட்டார்கள் ஆனால் மக்கள் இன்னும் திருந்திய பாடில்லை .
கொடுமுடிக்கு திர்த்தகாவடி எடுப்பதுபோல் இவரை பார்க்க படைஎடுதுக்கொண்டே இருக்கிறார்கள்.
திருமணமான தம்பதிகள் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச்சென்றல் 50000 கறந்துவிட்டு ஒருநிமிடம் மட்டும் ஆசி வழங்குகிறார் கேட்டால் அந்த ஒரு நிமிடத்தில் கடவுளோடு நேரடியாக பேசி ஆசி வழங்குவதாக கூறுகிறார். கடவுளோடு நேரடியாக தொடர்பு வைத்துள்ள ஒருவருக்கு எதற்க்காக பணம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படை அறிவு கூட நம் மக்களிடம் இல்லை.
மக்களிடம் ஏற்படும் மறுமலர்ச்சியே இப்படிப்பட்ட பக்தி பகல்வேடதரிகளை சிறையில் தள்ளும்



No comments:
Post a Comment