ஓடி குடும்பம் குடும்பமாய் எறிகணைக்கும் , ஷெல் வீச்சுகளுக்கும் , விமானத்தாக்குதலுக்கும் , வெறிகொண்ட சிங்கள போர் வீரர்களுக்கும் , சிங்கள கடற்ப்படையின் இடை விடாத ஏவுகணை தாக்குதலுக்கும் மத்தியில் தாய் , தந்தை , மகன் , பிள்ளை என்ற பேரம் பாராமல் கொத்துக்கொத்தாய் செத்து விழுந்த தினம் . ஒன்றரை ஆண்டுகள் நீடித்த போர் கடைசியில் 2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் வாக்குப்பதிவு என்னத்தொடங்கி காங்கிரஸ் பக்கம் வெற்றி என முடிவுகள் வர தொடங்கியவுடன் சிங்கள ராணுவம் மிக மூர்க்கத்தனமாக தனது இறுதித்தாக்குதலை இந்தியாவின் ஆதரவோடு உலக நாடுகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு , சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக இரசாயன ஆயுதம் ,கனரக ஆயுதங்களின் உதவியுடாக , சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடக மக்களுக்குசென்ற உணவுப்பொருள்களை
தடுத்து அவர்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கி , தமிழ் மக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் செறிந்து இருந்த அந்த முள்ளிவாய்க்கால் மீது மே 17 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை இறுதித்தாக்குதலை ஆரம்பித்து கோரத்தாண்டவம் ஆடியது . கடைசி நேரத்தில் மக்களின் உயிர் பலியை சகிக்க முடியாமல் எஞ்சியுள்ள மக்களை காப்பாற்ற காயமடைந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கசெய்து புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திரு. நடேசன் உள்பட சுமார் 300 பேர் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் திரு. டேவிட் மில்பண்டட், பத்திரிக்கையாளர் திருமதி. கொல்வின் , ஐநாவின் பிரதிநிதி திரு. விஜய் நம்பியார், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் ஊடக கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஒப்புதளைப்பெற்று சரணடைய வந்தவர்களை சர்வதேச போர் விதிகளுக்கு மாறாக மனிதபிமற்ற முறையில் சுட்டுக்கொல்ள்ளப்பட்டனர். அவர்களின் இரத்தம் காய்வதற்குள் மொத்த மக்களையும் கூண்டோடு அழித்து இராசயனக்கலவை ஊற்றி எரித்துவிட்டனர்.
சர்வத்ச பக்கச்சார்பற்ற ஊடகங்களை கடைசிவரை போர் பகுதிகளுக்குள் அனுப்பாமல் சிங்கள அரசு தடுத்தது ஆனால் சிங்கள அரசின் கைகூலிகளான NDTV, CNN ibn, TIMES NOW, HINDU, DINAMALAR ஆகிய ஊடகங்களின் பத்திரிக்கையாளர்களை எதோ சுற்றுலாவுக்கு அழைத்துசெல்வதுபோல் அவர்கள் ஏற்கனவே புலிகளிடமிருந்து
கைப்பற்றிய இடங்களுக்கு கூட்டிச்சென்று போர் நடக்கும் பகுதிபோல பாவ்லா கட்டினார்கள் இங்குள்ள சில ஈர வெங்காயங்களும் அதை அப்படியே நம்பினார்கள் . ஆனால் சர்வதேச ஊடகங்களான BBC, American CNN, THE TIMES (london) , CHENNAL 4 (london), AL JASIRA உள்பட பல ஊடகங்கள் உண்மையை வெட்டவேளிச்சமாக்கின. அதனால் இப்போது சிங்கள அரசின் மீது பல நாடுகள் போர்குற்ற விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன ஆனால் அதையும் இந்திய உள்பட பலநாடுகளின் உதவியோடு தப்பித்துவருகின்றனர் .
இந்த போரை திருமதி. சோனியாகாந்தி மட்டும் நினைத்திருந்தால் ஒரே நாளில் தடுத்திருக்க முடியும் ஆனால் அதை சொன்னால் சில காங்கிரஸ் நண்பர்களுக்கு கோவம் வருகிறது , என்ன செய்வது உண்மை கசக்கிறது என்பதற்காக அதை சொல்லாமலா இருக்கமுடியும். கலைஞர் போரை நிறுத்துவதை விட உலக தமிழர்களின் தலைவனாக பிரபாகரன் ஆகிவிடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால் தான் அவரால் போரை நிறுத்தமுடியும் என தெரிந்திருந்தும் கடைசி வரை ஆதரவை திரும்பப்பேராமல் கடிதம் ,தந்தி , கொரியர் , இஸ்பீடு போஸ்ட் , மனிதச்சங்கிலி , போராட்டம் , மறியல் , பந்த் கடைசியாக 2 மணிநேர உண்ணாவிரதம் என மழுப்பிக்கொண்டே இருந்தார்.
இவரால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ தபால் துறைக்கு நல்ல வருவாய் கிடைத்தது . முள்ளிவைக்கால் கோரம் நடந்துகொண்டிருந்தபோது இவர் டெல்லியில் அமர்ந்து பதவி பேரம் நடத்திக்கொண்டிருந்தார். இப்போது உலகத்தமிழ் மாநாடு என்று இழந்த தனது பெயரை மீட்க்கப்பார்கிறார். எத்தனை செய்தாலும் கால கல்வெட்டில் கலைஞரின் துரோகம் என்றும் மறையாது . நான் பிறந்ததே தி. மு.க குடும்பத்தில் என்றைக்கு இவர் ஈழ போரில் துரோகம் செய்தாரோ அன்று இவரின் உண்மையான
சுயருபத்தை தெரிந்து கொண்டேன். இந்தியா இராணுவ தளவாடங்களையும் ,
விமானங்களையும், குருந்தொலைவு ஏவுகணைகளையும், போர் வீரர்களையும் போதாக்குறைக்கு 500 கோடிக்குமேல் நம் வரிப்பணத்தை கடனாகவும் அள்ளிக்கொடுத்து அதுமட்டுமல்லாமல் ஐநா சபையில்
சிங்கள அரசின்மீது போர் குற்ற விசாரணை வரும்போதெல்லாம் அதைத்தான் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து காப்பாற்றி வந்தபோதெல்லாம் கைகட்டி வாய்மூடி
அமைதியாக இருந்துவிட்டு இப்போது தமிழ்மாநாடு என்று கூப்பாடு போடுகிறார்.
சோனியாகாந்தி குடும்பம் செயததென்னாவோ பழிவாங்கல் தான் ஆனால் கலைஞர் செய்தது பச்சை தமிழினத்துரோகம் தன குடும்பத்துக்காக மத்திய அரசோடு சண்டைபோடும் கலைஞர் தமிழினம் கொத்துக்கொத்தாய் செத்தபோது கோரிக்கையோடு
நின்றது ஏன். தமிழை வைத்து தன்னையும் தன் கட்சியையும் வளர்த்தார் தமிழ் மக்களின் உயிரை வைத்து தன் குடும்பத்தை வளர்க்கிறார் சினிமாக்காரிகளின் அரைகுறை நடனத்திலும் பாரட்டுமழையிலும் நனையும் இவருக்கு இன்னும் முள்வேலிக்குள் சுமார் 250000 தமிழ் மக்கள் தங்கள் உயிரையும் பெண்கள் மானத்தையும் தங்கள் கையில் பிடித்துக்கொண்டிருப்பது எங்கே தெரியப்போகிறது.
மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டே சாவது மேல்
என்றான் பாரதிதாசன்
முள்ளிவாய்க்கால் முடியாது !
தமிழினம் மடியது !
தன்மானம் குறையாது !
சிங்கள சேற்றில் !
தமிழ் மண் விடியாது !
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக !
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக !
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக !
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன !
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன !
எங்கள் உதடுகள் அண்டியிள்ளன !
எங்கள் பற்களும் கண்டிப்போயுள்ளன !
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக !
எங்கள் முதுகுதோல் பயிந்து போகட்டும் !
தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் உயரும் !
கவிழ்ந்த இமைகள் ஒருநாள் உயரும் !
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும் !
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் !
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக !
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !
- வைரமுத்து









No comments:
Post a Comment